வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து 12 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த மத கஜ ராஜா படம் பொங்கலுக்கு வெளியாகி 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கி உள்ளது. இதையடுத்து நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன்- 2 படத்தை இயக்குகிறார் சுந்தர். சி. இந்த நிலையில் தற்போது அவர் நாயகனாக நடித்திருக்கும் வல்லான் என்ற படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.
கிரைம் திரில்லர் காட்சிகள் நிறைந்த இந்த டீசரில், கண்ணைக் கட்டி ஆடுற கண்ணாமூச்சி ஆட்டத்தை விட, மனுஷங்க கண்ணை திறந்து இருக்கும்போது ஆடுற கண்ணாமூச்சி ஆட்டம் தான் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும் என்ற டயலாக் ஹைலைட்டாக அமைந்துள்ளது.
சுந்தர்.சியுடன் தன்யா ஹோப், சாந்தினி தமிழரசன் , அபிராமி வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த வல்லான் படத்தை மணி செய்யோன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் ஜனவரி 24ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.