நான் குடித்துக்கொண்டே இருப்பேன் : மிஷ்கின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் | டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகிறது 'பாட்ஷா': தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு | முதன் முறையாக தனி இசை கச்சேரி நடத்துகிறார் சித்ரா | பிளாஷ்பேக் : கே.பாக்யராஜை கொலைகாரனாக ஏற்காத ரசிகைகள் | பிளாஷ்பேக்: திரையில் காதலித்து நிஜத்தில் திருமணம் செய்த நட்சத்திர ஜோடி | தேவயானியின் முதல் இயக்கத்திற்கு கிடைத்த விருது | பிளாஷ்பேக்: முழுமை பெற்ற “ராஜமுக்தி”.. முடிவுக்கு வந்த எம் கே டியின் திரைப்பயணம்.. | ஒரு படம் ஓடுவதற்குள் கோடியில் சம்பளம் பேசும் லவ் டுடே நடிகர் | விஜய் 70 படத்தை இயக்கப் போகும் வெங்கட் பிரபு? | லப்பர்பந்து மூலம் 'சிக்ஸர்': ஆஹா... ஸ்வாசிகா! |
சமீபத்தில் வெளியான 'லப்பர்பந்து' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான மலையாள வரவு இவர். இவரை கூகுளில் தேடி கொண்டாட துவங்கி இருக்கின்றனர் தமிழ் சொந்தங்கள். மலையாளம், தமிழ், தெலுங்கு என பல சினிமாக்களில் நடித்திருந்தாலும் லப்பர்பந்து மூலம் சினிமாவில் சிக்ஸர் அடித்திருக்கிறார் ஸ்வாசிகா. 2 தமிழ், 2 மலையாளம், ஒரு தெலுங்கு படங்களில் பிஸியாக இருந்தவரிடம் பேசினோம்.
கொச்சி அருகே மூவாற்றுபுழா சொந்த ஊர். அங்கு பள்ளி படிப்பு, கொச்சியில் பட்டப்படிப்பு படித்தேன். படிக்கிற காலத்தில் டான்ஸ் மீது விருப்பம். கல்லுாரி நிகழ்ச்சி ஒன்றில் என்னை கவனித்த தமிழ் படக்குழுவினர் 2012ல் வைகை என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகையாக்கினர். கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சிகிராமம் என அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்பு கிட்டியது. மலையாளத்தில் தேவிகா, சொக்காளி, ஆன் தி வே, இட்டிமணி இன் சீனா, பாண்டுலம், குமாரி, வசந்தி என தற்போது வரை படங்கள் தொடர்ந்து கொண்டு உள்ளது.
வசந்தி மலையாள படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து லப்பர்பந்தில் நடிக்க விருப்பமா என மலையாள இசையமைப்பாளர் தீபுமேனன் மூலம் அழைப்பு விடுத்தார். கதை, கேரக்டரை அவர் சொன்ன விதம் பிடித்திருந்தது. உடனடியாக ஓ.கே., சொல்லி விட்டேன்.
இந்தளவுக்கு யசோதா கேரக்டர் என்னை தமிழக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் என எதிர்பார்க்கவில்லை. கல்லுாரி வயது பெண்ணுக்கு அம்மா கேரக்டர் என கூறிய போது தயக்கம் இருந்தது. யசோதா கேரக்டரின் முக்கியத்துவம் தெரிந்து ஒப்புக்கொண்டேன். எப்போவது தான் இதுபோன்ற அழுத்தமான கேரக்டர் கிடைக்கும். அதை விட்டு விடக்கூடாது என்ற எண்ணமும் ஒரு காரணம்.
அந்த படத்தில் இன்ட்ரோ சீன் நான் டிராக்டர் ஓட்டி வருவது போல அமைந்தது. இதற்காக கேரளாவில் டிரைவிங் இன்ஸ்டிடியூட்டில் ஒரு வாரம் பயிற்சி எடுத்தேன். பயிற்சி எடுத்ததால் படத்தில் யதார்த்தமாக அந்த சீன் அமைந்தது.
தற்போது சூர்யா 45 படம் மற்றுமொரு தமிழ் படத்தில் நடித்து வருகிறேன். தெலுங்கில் நடித்த தம்பிடு வெளியாகவுள்ளது. இரு மலையாள படங்களில் நடித்தும் வருகிறேன்.
ஷோபனா நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு ரோல் மாடலே அவர் தான். ஆக் ஷன் படங்களில் போலீஸ் அதிகாரியாக, சைக்கோவாக நடிக்கும் ஆசையும் இருக்கிறது.
மலையாளம் தாய் மொழியாக இருந்தாலும் வைகை படத்தில் நடித்த போது தான் தமிழ் கற்று கொண்டேன். தமிழ் ரசிகர்கள் நல்ல சினிமா என்றால் கொண்டாட தயங்க மாட்டார்கள்.
கோரிப்பாளையம் படத்தில் நடித்த போது மதுரையில் தான் தங்கியிருந்தேன். மதுரையையும், மீனாட்சியையும் மறக்க முடியாது. அந்தளவுக்கு மதுரைக்காரர்கள் பாசக்காரர்கள்.
பண்டிகைகளை குடும்பத்தினருடன் கொண்டாடுவோம். ஓணம், விஷூ பண்டிகைகளுக்கு சொந்த ஊருக்கு வந்து விடுவேன். கேரளாவில் திருவாதிரா விழாவையொட்டி பெண்கள் விரதம் இருப்பர். குழுவாக நடனமாடுவோம். எனக்கு பிடித்த திருவாதிரா விழாவை ஊரில் சிறப்பாக கொண்டாடினேன் என்றார்.