என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

2025ம் ஆண்டு ஆரம்பம் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் மிக சுமார் ஆகத்தான் ஆரம்பமாகி உள்ளது. வருடத்தின் முதல் வெள்ளிக்கிழமையான ஜனவரி 3ம் தேதி 7 படங்கள் வெளிவந்தன. அடுத்து பொங்கலை முன்னிட்டு நான்கு வெவ்வேறு நாட்களில் 7 படங்கள் வெளிவந்தன. ஆக மூன்றே வாரங்களில் 14 படங்கள் வெளிவந்துவிட்டது.
வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24ம் தேதி) “பாட்டல் ராதா, குடும்பஸ்தன், குழந்தைகள் முன்னேற்றக் கழகம், மிஸ்டர் ஹவுஷ்கீப்பிங், பூர்வீகம், வல்லான்” ஆகிய 6 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் படங்கள் இன்றும் நாளையும் தியேட்டர்களில் தாக்குப் பிடிக்க வாய்ப்புள்ளது. திங்கள் முதல் அவற்றிற்கான ரசிகர்கள் வருகை குறையலாம். எனவே, ஜனவரி 24ம் தேதி இத்தனை படங்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவில் தியேட்டர்கள் கிடைக்கலாம்.
ஜனவரி 31ம் தேதியன்று 'அகத்தியா' படம் மட்டும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை வந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதை அடுத்த மாதம் 6ம் தேதி வெளியாக உள்ள 'விடாமுயற்சி' படம் தீர்த்து வைக்கலாம்.