அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு இன்று திரைக்கு வந்துள்ள படம் 'மதகஜராஜா'. நேற்று இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டது. இதில் விஷால், சுந்தர். சி மற்றும் படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசிய விஷால், "சமீபத்தில் எனக்கு சாதரணமான காய்ச்சல் தான் இருந்தது. இப்போது குணமாகிவிட்டேன். நிறைய பேர் நான் 3 மாதம், 6 மாதம் படப்பிடிப்பிற்கு வரமாட்டேன் என்றார்கள். இப்போது அந்த மாதிரி எந்தவொரு நடுக்கமும் இல்லை. மைக் சரியாக தான் பிடித்துள்ளேன். எல்லோரும் இந்த படத்தை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். சாகும் வரை உங்கள் அன்பை மறக்க மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.