பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு | பிளாஷ்பேக்: அந்தக் கால 'மிடில் கிளாஸ்' | அப்பாவுக்கு என்னாச்சு? கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் | அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் | பிளாஷ்பேக்: வட்டார மொழி பேசி, வாகை சூடிய முதல் தமிழ் திரைப்படம் “மக்களைப் பெற்ற மகராசி” |

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான 'கங்குவா' படம் தோல்வி அடைந்ததை அடுத்து சூர்யாவின் மொத்த மார்க்கெட்டும் டவுன் ஆகிவிட்டது என்பது போன்று சிலர் செய்தி பரப்பி வருகிறார்கள். இந்த நேரத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போகும் 'வாடிவாசல்' படத்தை தயாரிக்கும் எஸ். தாணு வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், சூர்யா நடித்த 'ஜெய்பீம், சூரரைப்போற்று' போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. ஓடிடியில் அதிக பார்வையாளர்களை கவர்ந்தன. ஆனால் 'கங்குவா' என்ற ஒரு படம் தோல்வி அடைந்ததை வைத்து அவர் தோல்வி முகத்தில் இருப்பதாக கூற முடியாது. வெற்றி தோல்வி என்பது சினிமாவில் சகஜமான ஒன்றுதான். தற்போது நடித்து வரும் படங்கள் வெற்றி பெற்று மீண்டும் சூர்யா எழுந்து வருவார் என்று தெரிவித்திருக்கிறார் எஸ். தாணு.




