ரசிகையை அவமதித்தேனா? : நடிகர் ஷேன் நிகம் விளக்கம் | மறைந்த தாயார் ஸ்ரீதேவி அணிந்த நீல நிற சேலையில் கவனம் பெற்ற ஜான்வி கபூர்! | காய்ச்சல் காரணமாக ஓஜி புரமோஷன் நிகழ்ச்சிகளை தவிர்த்த பவன் கல்யாண் | தான் இறந்து விட்டதாக வதந்தி! பதிலடி கொடுத்த நடிகர் பார்த்திபன்!! | செக் மோசடி வழக்கிலிருந்து ராம்கோபால் வர்மாவை விடுவித்த நீதிமன்றம் | 'காந்தாரா சாப்டர்-1' பட விழாவில் கண்ணீர் விட்ட ருக்மணி வசந்த்! | சிவராஜ்குமாரை நேரில் சென்று சந்தித்த மஞ்சு மனோஜ் | சூர்யாவின் 'கருப்பு' படம் குறித்து நட்டி நடராஜ் வெளியிட்ட தகவல்! | ஆங்கிலம் சரளமாக பேச முடியவில்லை : லப்பர் பந்து சுவாசிகா கவலை | திரௌபதி 2 படப்பிடிப்பு நிறைவு |
எழுத்தாளர் கோமல் சாமிநாதன் எழுதி நடத்தி வந்த நாடகத்தை பார்த்த கே.பாலச்சந்தர் அதனை படமாக்க விரும்பினார். கோவில்பட்டி அருகில் உள்ள அத்திப்பட்டி என்ற கிராமத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்தும், அதற்காக அந்த மக்கள் நடத்தும் போராட்டம் குறித்தும் பேசிய படம் 'தண்ணீர் தண்ணீர்'. சரிதாதான் கதையின் நாயகி. அவருடன் வாத்தியார் ஆர்.கே.ராமன், ஏ.கே.வீராசாமி, ராதாரவி, குகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். பி.எஸ்.லோகநாத் ஒளிப்பதிவு செய்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
படம் வெளியாகி வணிகரீதியாவும் பெரிய வெற்றி பெற்றது. விருதுகளையும் குவித்தது. சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை என இரண்டு தேசிய விருதுகளை பெற்றது. இந்த படத்தில் நடித்த சரிதாவும், 'உமரோ ஜான்' என்ற பாலிவுட் படத்தில் நடித்த ரேகாவும் இறுதிச்சுற்று வரை வந்தனர். கடைசியில் நடுவர்களிடையே நடந்த வாக்கெடுப்பில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தேசிய விருதை இழந்தார் சரிதா. வடநாட்டு கலைஞர்கள் அதிகம் அந்த குழுவில் இருந்ததால் மொழி அடிப்படையில் அவர்கள் வாக்களித்தாக அப்போது விமர்சனம் செய்யப்பட்டது.