பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

2013ல் வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட விஷால் நடித்த 'மத கஜ ராஜா' படம் பொங்கலை முன்னிட்டு அடுத்த வாரம் ஜனவரி 12ம் தேதி வெளியாக உள்ளது. 12 வருடங்களுக்குப் பிறகு ஒரு படத்திற்கு விமோசனம் கிடைக்கும் போது அது போல வெளிவராமல் நிற்கும் மேலும் சில படங்களுக்கு விமோசனம் கிடைக்காதா என்ற பேச்சும் எழுந்துள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்', கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன் நடித்துள்ள 'நரகாசூரன்' ஆகிய படங்களும் வெளிவராதா என ஏற்கெனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் சில பல வருடங்களாகவே வெளியீட்டிற்காகத் தவித்து வருகின்றன. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், சிவா, ஷாம், சத்யராஜ் மற்றும் பலர் நடித்த 'பார்ட்டி', சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நடித்த 'இடம் பொருள் ஏவல்', ஆனந்த் பால்கி இயக்கத்தில், சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம்', ஆகிய படங்களும் அப்படியே முடங்கிப் போய் உள்ளன.
'மத கஜ ராஜா' படத்திற்கு ஒரு வழி பிறந்தது போல, 'துருவ நட்சத்திரம், நரகாசூரன், பார்ட்டி, இடம் பொருள் ஏவல், சர்வர் சுந்தரம்' ஆகிய படங்களுக்கும் ஒரு வழி பிறக்காதா ?. அவற்றின் சிக்கல்களைத் தீர்த்து அவற்றை வெளியிட வைக்க திரையுலகினர் முயற்சிக்க மாட்டார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.