பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
கேரளா தான் பூர்வீகம் என்றாலும் நடிகை நயன்தாரா மலையாள படங்களில் நடிப்பது என்பது ரொம்பவே குறைவு. சமீப காலமாகத்தான் வருடத்திற்கு ஒரு படம் என்கிற ரீதியில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் நிவின்பாலிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த 'லவ் ஆக்சன் டிராமா' என்கிற படம் வெளியானது. முழுக்க முழுக்க காதல், காமெடி கலந்து உருவாகி இருந்த இந்த படம் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று வெற்றி படமாகவும் மாறியது. இதனை தொடர்ந்து இந்த ஜோடியை அப்படியே வைத்து தற்போது 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' என்கிற படம் உருவாகி வருகிறது. படத்தின் டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி கல்லூரி பின்னணியில் இந்த படம் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இன்னும் சொல்லப்போனால் 'பிரேமம்' படத்தில் இடம்பெற்ற மாணவன்-டீச்சர் என்கிற லவ் கெமிஸ்ட்ரி பாணியில் தான், அதேசமயம் ஒரு புதிய கோணத்தில் உருவாகி இது இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப் குமார் என்கிற இரட்டை இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ளனர். நிவின்பாலியும் இந்த படத்தில் ஒரு தயாரிப்பாளராக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் வரும் பிப்ரவரியில் காதலர் தினத்தன்று இந்த படத்தின் ரிலீஸ் எதிர்பார்க்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.