பெத்தி : முதல் நாள் வசூல் ரூ.135 கோடி | 8 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பி வரும் ஆஸ்னா ஜவேரி | மறுபிரவேசம் தொடங்கி விட்டது : ஈடன் மகிழ்ச்சி | இருமுடிகட்டு : அய்யப்பன் மகிமை பேசும் இருமொழிப் படம் | காதல் கணவரை விவாகரத்து செய்யும் சுபா பூஞ்சா | பிளாஷ்பேக் : ஹிந்தி ரீமேக் படத்திற்கு திரைக்கதை எழுதிய கருணாநிதி | பிளாஷ்பேக் : தேவரை 'வாழ வைத்த தெய்வம்' | சிக்மா பாடல் டான்ஸ் : நடிக்க ஆசைப்படுகிறாரா ஜேசன் சஞ்சய் | சாய் அபயங்கரின் 3வது 200 மில்லியன் ஆல்பம் | பிகினி தோற்றம் : கிரித்தி சனோன் வெளியிட்ட தகவல் |

சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கி பரமன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்தவர் சசிகுமார். பின்னர் நாடோடிகள் , போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, தாரை தப்பட்டை, அயோத்தி என்று பல படங்களில் நடித்த சசிகுமார் தற்போது டூரிஸ்ட் பேமிலி, நந்தன், பகைவனுக்கும் அருள்வாய் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ஹீரோயிசம் என்பதை தாண்டி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கதைகளுக்கு சமீபகாலமாக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி படம் விரைவில் திரைக்கு வரப்போகிறது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு இருந்த சசிகுமார் தற்போது சபரிமலை சென்று இருக்கிறார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




