ராஜா சாப் படப்பிடிப்பில் பிரபாஸிற்கு காயம் : ஜப்பான் ட்ரிப் கேன்சல் | படை தலைவன் ‛ஏஐ' விஜயகாந்த் பற்றி இயக்குனர் அன்பு | ஐந்து நாட்களில் 6 முறை விமானத்தில் பயணித்த த்ரிஷா | ஓடிடியில் சாதனை படைத்த சூர்யாவின் கங்குவா | இளையராஜா பயோபிக் படம் டிராப் இல்லை | மார்க் ஆண்டனி 2ம் பாகம் உருவாகிறதா? | பாலிவுட்டில் சந்தோஷ் நாராயணன் : சல்மான் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு இசை | வைரலான த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவு | “இதயக்கனி”யை பறித்த இயக்குநர் வழங்கிய “வெள்ளை ரோஜா” | புது சீரியலில் கமிட்டான ஆல்யா மானசா |
இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவில் இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளதாக அறிவித்தனர். இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கின்றார். இப்படத்தை கன்னெக்ட் மீடியா மற்றும் மெர்குரி என இரு நிறுவனங்கள் தயாரிக்கின்றனர். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்திற்கு 'இளையராஜா' என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்தனர்.
கடந்த சில வாரங்களாக இப்படம் கைவிடப்பட்டதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் நெருங்கிய வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவலின் படி, இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஏற்பட்டு வரும் தாமதத்தால் இதன் படப்பிடிப்பை 2025ம் ஆண்டு, ஜூன் மாதத்திற்கு பிறகு துவங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றன.