வருண் தவானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சிவகார்த்திகேயன், ஜெயம் ரவியின் புதிய பட பணிகள் துவங்கின | ‛டூரிஸ்ட் பேமிலி' பட டப்பிங் பணியில் சசிகுமார் | திரையுலகில் 22 ஆண்டுகள் : சூர்யா 45 படப்பிடிப்பில் த்ரிஷா கேக் வெட்டி கொண்டாட்டம் | படைதலைவன் படத்தின் டிரைலரில் தனது ஹிட் பாடலுடன் முகம் காட்டிய விஜயகாந்த் | அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராஷ்மிகா - நானி | பிளாஷ்பேக் : விசுவை சினிமா நடிகராக்கிய எஸ்.பி.முத்துராமன் | பிளாஷ்பேக் : கண்ணாம்பா வசனத்தால் தோல்வி அடைந்த படம் | 'கொரோனா குமார்' வழக்கு முடித்து வைப்பு | லண்டன் இசை பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் |
கங்குவா படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள படத்தில் நடித்துள்ள சூர்யா, அதன் பிறகு ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். சூர்யாவின் 45 வது படமான இப்படத்தின் பூஜை கோவையில் உள்ள ஆனைமலை மாசானியம்மன் கோவிலில் துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பும் அந்த பகுதியிலேயே நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் மௌனம் பேசியதே, ஆறு உள்ளிட்ட படங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் த்ரிஷா திரை உலகில் நடிக்க வந்து 22 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், அவர் சூர்யா 45 வது படத்தில் நடிப்பதை அப்படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் நிறுவனம் ஒரு போஸ்டர் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது. அதோடு படப்பிடிப்பு தளத்தில் அவர் 22 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு சூர்யா, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அதை கேக் வெட்டி கொண்டாடினர்.