பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் |
விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆகஸ்ட் மாதம் வெளிவந்த 'தங்கலான்'. பொதுவாக ஒரு படம் வெளிவந்தால் நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் வெளியாகி விடும். ஆனால், இப்படம் ஓடிடி வெளியீடு தாமதமாவதற்கு சில வழக்குகள் காரணமாக இருந்தன. அதனால், கடந்த நான்கு மாதங்களாக ஓடிடி தளத்தில் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வந்ததை அடுத்து தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இடம் பெற்றுள்ளது. ஹிந்தி மொழி வெளியீடு குறித்த தகவல் எதுவும் இல்லை.
தற்போதைய ஓடிடி வெளியீட்டைக் கூட எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென வெளியிட்டுள்ளார்கள்.