ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
மலையாள திரையுலகில் பெண்கள் வாய்ப்பு தேடி உள்ளே நுழையும்போது அங்கு இருக்கும் பிரபலங்களால் படுக்கைக்கு அழைக்கப்படுவதும், பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவதும் கடந்த பல வருடங்களாகவே நடந்து வருகிறது என கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை பட்டவர்த்தனமாக போட்டு உடைத்தது. இதனைத் தொடர்ந்து பல பெண்கள், பிரபலமான நடிகர்கள் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். பலர் காவல் துறையிலும் புகார் செய்தார்கள். நடிகர்கள் சித்திக், முகேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வும் நடந்தது.
அதேசமயம் இப்படி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் இடையே 16 பக்கங்கள் நீக்கப்பட்டு தான் வெளியானது. எதற்காக இந்த பக்கங்கள் நீக்கப்பட்டன என்பது குறித்து அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்தப் பக்கங்களில் தான் யார் யார் இதுபோன்று பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டார்கள் என விசாரணையின் போது வாக்குமூலம் கொடுத்த சம்பந்தப்பட்ட பெண்கள் கூறிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பர்சனல் காரணங்களுக்காக இதை நிறுத்தி வைப்பதாக அப்போது கேரள அரசு கூறியிருந்தது.
ஆனாலும் சில பத்திரிகையாளர்கள், நீதிமன்றத்தின் மூலமும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமும் இந்த மறைக்கப்பட்ட பக்கங்களை வெளியிட வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அந்த 16 பக்கங்களை வெளியிடுவது குறித்த முடிவு எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்தப் பக்கங்கள் வெளியானால் இதில் அப்படி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட பிரபலங்களின் பெயர்களும் வெளிச்சத்திற்கு வரும் என்பதால் மீண்டும் மலையாள திரை உலகில் ஒரு புயல் வீசப்போவது மட்டும் உறுதி.