‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த படம் 'அமரன்'. இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்து உலக அளவில் 300 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது.
நேற்று முன்தினம் டிசம்பர் 5ம் தேதி நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இப்படம் வெளியானது. அதற்குள்ளாகவே இந்திய அளவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிகம் பார்க்கப்படும் படத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மற்ற மொழிகளில் வெளியான படங்களை பின்னுக்குத் தள்ளி உடனே இப்படி முன்னேறியிருப்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி காஷ்மீர் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக 'அமரன்' வந்தது. அதனால், இந்திய அளவில் இந்தப் படத்தைப் பார்க்க அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது. தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.