ஆண்கள் மட்டுமே நடித்துள்ள 'ஆகக் கடவன': நாளை ரிலீஸ் | மோகன்லாலின் வாழ்க்கை கதை புத்தகம்: டிசம்பரில் வெளியீடு | டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு சம்மன்? | அட்லிக்கு டாக்டர் பட்டம்: சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்குகிறது | பிளாஷ்பேக்: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஈடுகட்டிய என்.எஸ்.கிருஷ்ணன் | பிளாஷ்பேக்: விஜய் படத்தை நிராகரித்த அஜித் | ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ஜனவரி பத்தாம் தேதி பொங்கலுக்குத் இப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இன்னும் ஒரு பாடல் காட்சி படமாகாமல் உள்ள நிலையில், அந்தப் பாடல் காட்சியை டிசம்பர் 13ம் தேதி படமாக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது அஜித்குமார் தன்னுடைய டப்பிங் பணிகளை தொடங்கி இருக்கிறார். இந்த படத்தின் கடைசி பாடல் காட்சியை படம் ஆக்குவதற்கு முன்பே டப்பிங் உள்ளிட்ட பெருவாரியான இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.