'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? | ரஜினி, கமல் படத்தின் ரிலீஸ் தேதியை குறிவைத்த படக்குழு! | 'தனுஷ் 56' படத்தில் 'உறியடி' விஜய்குமார்? | 'சிக்மா' படத்தை நம்பும் லைகா நிறுவனம்! | ரஜினி 173வது படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட பிரபலம்! | தனுஷ் 55வது படத்தில் தெலுங்கு நடிகர்! | கர்நாடக பாடகி எஸ்.ஜே. ஜனனிக்கு 'எம்போஹெர்' விருது | கவுண்டமணி கதாபாத்திர பெயரை டைட்டிலாக வைத்து நடிக்கும் யோகிபாபு |

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் சொல்லியும், நிவாரண உதவிகள் வழங்கியும் வருகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நடிகர் விஜய் நேற்று அவருடைய கட்சி அலுவலகத்தில் செய்த உதவி சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்டு 250 குடும்பத்தினரை தனது கட்சி அலுவலகம் இருக்கும் இடமான பனையூருக்கு வரவழைத்து அங்கு அவர்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார் விஜய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவி வழங்காமல் இப்படி வீட்டிலிருந்தே உதவி வழங்கி வருவதை மீம்ஸ் போட்டும் பலர் கிண்டலடித்து வருகிறார்கள்.
அரசியலை சிலர் சமூக வலைத்தளங்களில் மட்டுமே செய்வதை வழக்கமாக வைத்திருக்க, விஜய், 'வொர்க் பிரம் ஹோம்' பாணியில் அரசியல் செய்வதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதனால், விஜய் ஏதாவது ஒரு இடத்திற்கு விரைவில் நேரில் செல்ல வாய்ப்புள்ளது. அதன் மூலம் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.