கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

தமிழகத்தில் பெஞ்சல் புயலால் உருவான மழை கடந்த சில நாட்களாகவே நீடித்து வருகிறது. நேற்று அந்தப் புயல் கரையைக் கடக்க இருந்ததால், தமிழகத்தில் உள்ள அனைத்துத் தியேட்டர்களிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இன்றும் சில மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது. இருந்தாலும் தியேட்டர்களில் முன்பதிவு என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. அவ்வப்போது மழை வரலாம் என்ற வானிலை முன் அறிவிப்பும் இருப்பதால் தியேட்டர்களுக்குச் செல்வதை மக்கள் தவிர்த்துள்ளார்கள்.
நேற்று முன்தினம் ஆர்ஜே பாலாஜி நடித்த 'சொர்க்கவாசல்' உள்ளிட்ட ஆறு படங்கள் வெளியாகின. 'சொர்க்கவாசல்' படத்தில் மட்டும்தான் ரசிகர்களுக்கு அறிமுகமான ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார். மற்ற படங்களில் நடித்துள்ள நாயகர்கள் அவ்வளவு பிரபலமானவர்கள் இல்லை. 'சொர்க்கவாசல்' படமும் 'ஏ' சான்றிதழ் பெற்ற படம் என்பதால் அப்படத்தையும் குடும்பத்துடன் சென்று பார்க்க வாய்ப்பில்லை. இப்படியான காரணங்களால் இந்த வாரம் வெளியான படங்களின் வசூல் நிலவரம் கலவரமாகவே உள்ளது.