புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? | முக்கிய நிபந்தனையுடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பும் கிச்சா சுதீப் |
டில்லியில் விமான படையில் பணியாற்றிய கணேஷ் அங்கு நாடகங்களிலும் நடித்து வந்தார். அதன்பிறகு சென்னை வந்து டெல்லி கணேஷ் என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்தார். குணசித்ர வேடங்களில் அறிமுகமாகி குணசித்ர கேரடர்களில் மட்டுமே 500 படங்களுக்கு மேல் நடித்தார்.
அவர் முதன் முறையாக ஹீரோவாக நடித்த படம் 'எங்கம்மா மகராணி'. எம்.ஏ.காஜா இயக்கிய இந்த படத்தில் டெல்லி கணேஷ் நாயகனாகவும், சுமித்ரா நாயகியாகவும் நடித்தார்கள். இவர்களுடன் ரூபா, சுருளிராஜன், நளினிகாந்த், ராகினி, ஒய்.விஜயா ஆகியோரும் நடித்தார்கள். வியட்நாம் வீடு சுந்தரம் வசனம் எழுதியிருந்தார். சங்கர்-கணேஷ் இசை அமைத்திருந்தனர்.
ஸ்ரீ காயத்ரி என்டர்பிரைசஸ் சார்பில் மாணிக்கம் செட்டியார் தயாரித்திருந்தார். படத்தில் இடம் பெற்ற 'மாலையில் பூத்த...' என்ற பாடல் புகழ்பெற்றது. இதனை எழுதிய புலமைப்பித்தனுக்கு சிறந்த பாடல் ஆசிரியருக்கான தமிழக அரசு விருது கிடைத்தது. பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடி இருந்தனர். நடுத்தர குடும்பத்திற்குள் நடக்கும் கலாட்டாக்களை வைத்து உருவான படம்.