சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெளிவந்த 'அமரன்' திரைப்படம் திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. விஜய்யின் 'தி கோட்' படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அதில் விஜய் சிவகார்த்திகேயனிடம் 'துப்பாக்கிய பிடிங்க சிவா' என பேசிய வசனம் சிவகார்த்திகேயனின் சினிமா கேரியருக்கு மைலேஜாக அமைந்தது.
இந்த நிலையில் அமரன் படத்தின் வெற்றிக்காக சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து அவர் கூறியதாவது, "ஷூட்டிங்கிற்கு முதல் நாள் தி கோட் படத்திற்கான சீன் பேப்பர் கொடுத்தனர். இதை பார்த்துகொங்க சுடக்கூடாது என்று தான் வெங்கட் பிரபு வசனம் எழுதியிருந்தார். ஆனால், விஜய் தான் அதை மாற்றி துப்பாக்கியை பிடிங்க சிவா என பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது அவர் எனக்கு தந்த அன்பாக மட்டுமே பார்க்கிறேன் ". என இவ்வாறு பகிர்ந்திருந்தார் சிவகார்த்திகேயன்.