நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விடாமுயற்சி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்தின் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். ஏற்கனவே நடித்த பில்லா படத்தை போலவே இந்த படத்திலும் ஸ்டைலிசான தோற்றத்தில் நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தை அடுத்து இந்த படத்திலும் நடிக்கிறார் திரிஷா. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி வெளிநாடுகளில் நடைபெற்று வந்த நிலையில், ஓரிரு வாரத்திற்குள் குட் பேட் அக்லி படப்பிடிப்பு முடிவடைய இருக்கிறது. இதனால் இந்த படம் திட்டமிட்டபடி ஜனவரியில் பொங்கல் தினத்தில் திரைக்கு வந்து விடும் என்பது தெரியவந்துள்ளது. குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை முடித்ததும் ஐரோப்பாவில் நடைபெறும் கார் ரேஸில் கலந்து கொள்ளப் போகிறார் அஜித். அதனால் அதற்கான பயிற்சியில் அடுத்தபடியாக அவர் ஈடுபட போகிறார். மேலும், குட் பேட் அக்லி படத்துக்கு முன்பே மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.