லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? | அபார்ட்மென்ட் வாங்கத் தவிக்கும் '3 பிஹெச்கே', அதைவிட்டு போகச் சொல்லும் 'பறந்து போ'!! | டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் |
கோமாளி படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் நடித்த பொன்னியின் செல்வன் என்ற மல்டி ஸ்டார் படமும் ஜெயம் ரவிக்கு வெற்றியை கொடுத்தது. ஆனால் அதன் பிறகு அவர் நடித்த அகிலன், இறைவன், சைரன், பிரதர் போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்தன. இதையடுத்து அவரது நடிப்பில் காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற படங்கள் வெளியாக உள்ளன. இதைத்தொடர்ந்து டாடா பட இயக்குனர் கணேஷ் பாபு இயக்கும் படத்திலும் நடிக்க போகிறார் ஜெயம் ரவி.
இப்படியான நிலையில், தனது படங்களின் தொடர் தோல்வி காரணமாக அடுத்து சுதா கெங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புறநானூறு படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிப்பதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜிடத்தில் பேச்சுவார்த்தை நடத்திய சுதா, அவர் நடிக்க மறுத்ததை அடுத்து மலையாள நடிகர் நிவின் பாலி இடத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது அந்த வேடத்தில் நடிக்க ஜெயம் ரவி இடத்தில் அவர் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.