'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? |
'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்காக 'சிறந்த சவுண்ட் மிக்சிங்' ஆஸ்கர் விருது, 'பழசிராஜா' மற்றும் 'ஒத்த செருப்பு சைஸ் 7' ஆகிய படங்களுக்காக சிறந்த ஆடியோகிராபி தேசிய விருதுகள், ஆகியவற்றைப் பெற்றவர் சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி. தமிழில், “எந்திரன், கோச்சடையான், ரெமோ, 2.0, ஒத்த செருப்பு சைஸ் 7,' உள்ளிட்ட படங்கள் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பணியாற்றி வருபவர் ரசூல் பூக்குட்டி.
சூர்யா நடிப்பில் நேற்று வெளியான 'கங்குவா' படம் பற்றிய அவரது பதிவு ஒன்றை, படத்தின் விமர்சனக் கருத்து அடங்கிய புகைப்படம் ஒன்றுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். “என்னுடைய நண்பர், ரீ ரிக்கார்டிங் மிக்சர் இந்த கிளிப்பை எனக்கு அனுப்பினார். நமது பிரபலமான படங்களில் ஒலி பற்றிய இது போன்ற விமர்சனத்தைப் பார்ப்பது மன வருத்தமாக இருக்கிறது. எங்கள் கைவினைத் திறனும், கலைத் திறனும் உரத்தப் போரில் சிக்கிக் கொண்டது யார் குற்றம்? சவுண்ட் அமைப்பைச் செய்தவருடையதா? அனைத்து பாதுகாப்பில்லாத தன்மையைப் போக்க கடைசி நேரத்தில் எண்ணற்ற திருத்தங்கள் வருகின்றன. எங்களது கலைஞர்கள் பல சமயங்கள் உங்கள் கால்களில் விழுந்து எல்லாவற்றையும் சத்தமாகவும், தெளிவாகவும் சொல்கிறார்கள். தலைவலியுடன் ரசிகர்கள் ஒரு படத்தை விட்டு வெளியேறும் போது அந்தப் படத்திற்கு ரிபீட் மதிப்பு திரும்ப கிடைக்காது,” என வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.
'கங்குவா' படத்தைப் பார்த்த விமர்சகர்கள், எண்ணற்ற ரசிகர்கள் சொல்லும் முக்கிய குறை படத்தின் சத்தம், இரைச்சல். ஆரம்பம் முதல் கடைசி வரை கதாபாத்திரங்கள் பேசுவதை விட கத்திக் கொண்டே இருப்பதும், பின்னணி இசை அதிக ஒலியுடன், இரைச்சலாக இருப்பதுமே இந்தப் படத்தின் முக்கியமான நெகட்டிவ் அம்சமாக உள்ளது. அதை உடனடியாகத் திருத்தினால் மட்டுமே ரசிகர்கள் அச்சமில்லாமல் வந்து பார்க்க வாய்ப்பாக இருக்கும்.