அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் 2021ல் வெளிவந்த படம் 'புஷ்பா'. அந்த முதல் பாகப் படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானது. நேரடி தெலுங்குப் படம் என்றாலும் தமிழ், ஹிந்தி டப்பிங்கிலும் பாடல்கள் பெரிதும் ரசிக்கப்பட்டு ஹிட்டானது.
'புஷ்பா 2' படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் தான் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாக படத்திற்கான பின்னணி இசையை தேவி ஸ்ரீ பிரசாத் அமைக்கவில்லை. இசையமைப்பாளர்கள் தமன் மற்றும் அஜனீஷ் லோகநாத் ஆகியோர் அமைத்து வருகிறார்கள் என்ற தகவல் வெளியானது. படக்குழுவிலிருந்தோ, தேவி ஸ்ரீ பிரசாத் தரப்பிலிருந்தோ இது குறித்து எதுவுமே சொல்லாமல் இருக்கிறார்கள்.
இதனிடையே, நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பின்னணிப் பாடகர் கார்த்திக்கின் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்தார் இசையமைப்பாளர் தமன். அப்போது மேடையில் கார்த்திக்கிடம் பேசும் போது, 'புஷ்பா 2 எனக்காகக் காத்திருக்கிறது,” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
இதையடுத்து அப்படத்தின் பின்னணி இசையை தமன் அமைக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.