மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
1980ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி பாரதிராஜா இயக்கிய படம் 'நிழல்கள்'. இதில்தான் ரோகிணி, நிழல்கள் ரவி அறிமுகமானார்கள். இவர்களுடன் ராஜசேகரன், சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார் அனைத்து பாடல்களும் ஹிட்டானது. கண்ணனின் ஒளிப்பதிவும் பேசப்பட்டது.
ஆங்கில இலக்கியம் படித்து சரியான வேலை கிடைக்காமல் திண்டாடும் இளைஞராக நிழல்கள் ரவி, சங்கீதக் கனவுகளுடன் வாழும் அவனுடைய நண்பன் சந்திரசேகர், ஒரு சராசரி இளைஞனாக இல்லாமல் அனைத்தையும் ரசித்து இயக்கையோடு வாழும் ஒரு கல்லூரி மாணவனாக ராஜசேகர், இவர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் ஒரு பெண்ணாக ரேணுகா இவர்களை சுற்றித்தான் இக்கதை.
இதே ஆண்டு இதே தேதியில் வெளியான இன்னொரு படம் 'வறுமையின் நிறம் சிவப்பு'. கே.பாலச்சந்தர் இயக்கி இருந்தார் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, பிரதாப் போத்தன், எஸ்.வி.சேகர், திலீப் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார், பாடல் அனைத்தும் ஹிட். பி.எஸ்.லோகநாத்தின ஒளிப்பதிவு பேசப்பட்டது.
ஆச்சாரமான இசை குடும்பத்தில் பிறந்த கமல்ஹாசன் முற்போக்கு சிந்தனை உடையவராக இருக்கிறார். இதனால் தந்தையுடன் கோபித்துக் கொண்டு டில்லி வரும் அவர் அங்கு வேலை தேடி அலைவதுதான் கதை.
'நிழல்கள்' கதையும், 'வறுமையின் சிவப்பு' கதையும் வேலை இல்லா திண்டாட்டத்தை மையப்படுத்தியதுதான். ஆனால் வறுமையின் நிறம் சிவப்பு வெற்றி பெற்றது, நிழல்கள் தோல்வி அடைந்தது. இதற்கான காரணம் இன்று வரைக்கும் விவாதிக்கப்பட்டு வருகிறது. திரைப்பட கல்லூரிகளில் பாடமாகவும் இருக்கிறது.