ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
பிரபல பின்னணி இசை அமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா, தந்தையை போலவே இசையமைப்பாளராக இருக்கிறார். தேவாவின் மகள் ஜெயப்பிரதா. இவருக்கு வடபழனியில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. அங்கே தீபிகா என்பவர் தனது கணவர் ஜெயக்குமாருடன் கடந்த சில வருடங்களாக வசித்து வருகிறார். இவர்கள் சொந்தமாக ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு மூன்று மாதங்களாக தீபிகா வாடகை பாக்கி வரவில்லை என்று வடபழனி காவல் நிலையத்தில் ஜெயப்பிரதா புகார் செய்திருந்தாராம். அப்போது தனக்கு ஹார்டுவேர்ஸ் கடையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சரியான நேரத்திற்கு வாடகை கொடுக்க முடியவில்லை என்றும், இனி சரியாக கொடுத்து விடுகிறேன் என்றும் தீபிகா சொன்னதாக கூறப்படுகிறது.
ஆனாலும் சொன்னபடி அவரால் வாடகை கொடுக்க முடியாததால் சில நாட்களுக்கு முன்பு தீபிகாவின் வீட்டிற்கு ஏழு நபர்களை அனுப்பி அவரையும் அவர் கணவரையும் ஜெயப்பிரதா மிரட்டியதாக தற்போது குற்றம் சாட்டியுள்ளார் தீபிகா. இது குறித்து அவர் அழுது கொண்டே வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் மேற்கூறிய அனைத்து தகவல்களையும் கூறி ஏழு பேர் கத்தியுடன் வந்து தங்களை மிரட்டியதாகவும் பொருட்களை சேதப்படுத்தியதாகவும் கூறியதுடன் எனக்கோ என் கணவருக்கோ ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு ஜெயப்பிரதா தான் முழு பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.
மேலும் அப்படிப்பட்ட நபர்கள் வந்து சென்ற சமயத்தில் அவசர போலீஸ் உதவியை தான் நாடியதாக கூறியுள்ள தீபிகா, தற்போது இது குறித்து காவல் துறையில் எழுத்துப்பூர்வமான புகார் அளிக்க மறுத்துவிட்டார். அதேசமயம் போலீசார் இவர் வெளியிட்டுள்ள வீடியோவின் அடிப்படையில் தங்களது விசாரணையை துவங்கி உள்ளனர்.