'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
அம்மா அப்பா செல்லம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பாலா. இவர் இயக்குனர் சிவாவின் சகோதரர். அவர் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த வீரம், ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படங்களிலும் பாலா நடித்திருந்தார். பல வருடங்களாக மலையாள திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். அடிக்கடி சர்ச்சையான விஷயங்களிலும் சிக்கி தவித்து வருகிறார்.
இவர், பின்னணி பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து 2010ல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை 2016ல் விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களுக்கு அவந்திகா என்கிற பெண் குழந்தை இருக்கிறது. அடுத்ததாக 2021ல் கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை திருமணம் செய்தார். இவருடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.
அதுமட்டுமல்லாமல், இவர் அம்ருதா சுரேஷை திருமணம் செய்வதற்கு முன்பாகவே கடந்த 2008ல் கர்நாடகாவை சேர்ந்த சந்தனா சதாசிவா என்பவரை திருமணம் செய்திருந்தார் என்கிற திருமண சான்றிதழ் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திருமணத்தை மறைத்து தன்னை திருமணம் செய்ததாக அம்ருதா சுரேசும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் பாலா, அவரது முறைப்பெண்ணான கோகிலா என்பவரை இன்று எர்ணாகுளம், கலூர் பாவகுளம் கோவிலில் திருமணம் செய்துள்ளார். இது பாலாவின் 4வது திருமணமாகும். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு கோகிலாவுக்கு அவரது பிறந்த நாளன்று தான் கேக் ஊட்டி விட்ட வீடியோவையும் பிரியாணி ஊட்டிவிட்ட வீடியோவையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார் பாலா.