ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
விஜய் நடித்த 'தமிழன்' படத்தை இயக்கியவர் மஜீத். விஜய் நடித்த முக்கியமான படங்களில் ஒன்று. ஆனால் இதற்கு பிறகு மஜீத் இயக்கிய படங்கள் எதுவும் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் இயக்கி உள்ள படத்தில், விமல், யோகி பாபு நடித்துள்ளனர். இதனை அவர் காமெடி படமாக உருவாக்கி உள்ளார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. படத்தை மஜீத்தே தயாரித்தும் உள்ளார்.
விமலுக்கு ஜோடியாக சாம்பிகா டயானா நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சாம்ஸ், நமோ நாராயண், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், ரங்கநாதன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கோகுல் ஒளிப்பதிவு செய்கிறார். பைஜு ஜோசப் இசை அமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 55 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
படம் பற்றி மஜீத் கூறும்போது “இந்த நவீன உலகத்தில் எல்லாமே புரோக்கர் வழியாக என்றாகிவிட்டது. பல வகையான புரோக்கர்களின் வழியாகவே நம் அன்றாட வாழ்க்கை நடக்கிறது. அந்த புரோக்கர்களால் நிகழும் நல்லதும் கெட்டதும் கலந்த சம்பவங்களை, சிரித்து மகிழும் அருமையான திரைக்கதையாக கோர்த்து, இப்படத்தை உருவாக்கி உள்ளேன். யோகி பாபு, விமலின் கூட்டணியில் இந்த காமெடி படம் பேசப்படுவதாக இருக்கும்” என்றார்.