சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி |

கடந்த 2005ம் ஆண்டில் சூர்யா, அசின், நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய படம் 'கஜினி'. அதையடுத்து 2008ம் ஆண்டில் அதே படத்தை ஹிந்தியில் அமீர்கானை வைத்து ரீமேக் செய்தார் முருகதாஸ். அந்த படத்தில் அசின் நாயகியாக நடித்திருந்தார். இப்படியான நிலையில் தற்போது கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் தயாராகி வருகிறார்.
இந்த படத்தை அமீர்கானை வைத்து முருகதாஸ் இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது சூர்யா- அமீர்கான் ஆகிய இருவரையும் வைத்து கஜினி-2 படத்தை அவர் இயக்க இருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் சிவகார்த்திகேயன், சல்மான் கான் நடிக்கும் படங்களை தற்போது இயக்கி வரும் முருகதாஸ், அந்த படங்களை முடித்துவிட்டு இந்த கஜினி-2 பட வேலைகளில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.