நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் இன்று (அக்-10) உலகெங்கிலும் வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இதற்கு முன்னதாக வெளியான ரஜினியின் படங்கள் தெலுங்கில் வெளியாகும்போது அந்த மொழிக்கு ஏற்றபடி டைட்டில் வைக்கப்பட்டு ரிலீஸ் ஆகி வந்தந. அதே சமயம் அவர் கடந்த வருடம் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் டைட்டில் என்பதால் அதே பெயரிலேயே ரிலீஸ் ஆனது.
ஆனால் தற்போது அவர் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் தமிழ் டைட்டில் என்பதால் வேட்டகாடு என்கிற இதற்கு ஏற்ற பொருத்தமான தெலுங்கு டைட்டிலில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சித்து வந்தது. ஆனால் வேறொருவர் வசம் அந்த டைட்டில் இருந்ததால் கடைசி வரை அவர்களால் அதை பெற முடியவில்லை. அதனால் தற்போது வேறு வழியின்றி வேட்டையன் ; தி ஹண்டர் என்கிற பெயரிலேயே இந்த படம் தெலுங்கில் மட்டுமல்ல மற்ற அனைத்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது என்று தயாரிப்பு நிறுவனம் ஒரு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.