‛மும்பையில் பிறந்தாலும் மனசுல தமிழ் பொண்ணுதான்': ஹன்சிகா திடீர் மதுரை விசிட் | கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் இதோ! | பில்லா, அசல் வரிசையில் ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த பிரபு | ‛வா வாத்தியார்' பட ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு! | மணிரத்னம் - ரஜினிகாந்த் கூட்டணியா ? திடீரெனப் பரவும் தகவல் | பிளாஷ்பேக்: இயக்குனர் பாரதிராஜாவை இயக்கிய நிவாஸ் | அக்ஷய் குமாரின் இரண்டு தோல்விப் படங்கள், அடுத்த வாரம் ஓடிடியில்… | பிளாஷ்பேக்: அண்ணன், தம்பி இணைந்து நடித்த 'இரு சகோதரர்கள்' | சூர்யா நடிக்க உள்ள 'கர்ணா': உறுதி செய்த தயாரிப்பாளர் | நடன இயக்குனர் ஜானிக்கு தேசிய விருது ரத்து |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழில் தனுஷ் நடித்த ‛மாப்பிள்ளை' படத்தில் அறிமுகமான ஹன்சிகா, அதனைத் தொடர்ந்து விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று (அக்.,6) மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர், ஹோட்டலுக்கு சென்று மதுரை உணவுகளை ரசித்து சாப்பிட்டார்.
மதுரை விசிட் குறித்து ஹன்சிகா, தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில், ‛‛மும்பையில பொறந்தாலும் மனசுல எப்பொழுதும் நான் தமிழ் பொண்ணுதான். நம்ம ஊரு சாப்பாடு'' எனத் தமிழில் பதிவு செய்துள்ளார்.