Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் கடைசி பட படப்பிடிப்பு அடுத்த சில நாட்களில் ஆரம்பம்

01 அக், 2024 - 10:33 IST
எழுத்தின் அளவு:
The-shooting-of-Vijays-last-film-will-begin-in-the-next-few-days

வினோத் இயக்கத்தில், விஜய் நடிக்க உள்ள அவரது கடைசி படமான விஜய் 69 படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 5ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் 4ம் தேதி படத்தின் பூஜையை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்களாம். அடுத்த வருடமான 2025ல் அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பது மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நடிகர்கள் நடிகையர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படம் தமிழகத்தில் பெரும் வசூலைக் குவித்தாலும் மற்ற மாநிலங்களில் எதிர்பார்த்த வசூலைப் பெற முடியவில்லை தனது கடைசி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் அளவில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறாராம் விஜய்.

தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக வெளியாக உள்ள படம் என்பதால் படத்தில் அரசியல் கருத்துக்கள் நிறைய இருக்கும் எனத் தெரிகிறது. எனவே, படத்தில் விஜய்யின் தலையீடு அதிகம் இருக்கவும் வாய்ப்புள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு? சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் ... மெய்யழகன் - நேரக் குறைப்பு சர்ச்சைக்கு இயக்குனர் அறிக்கை மெய்யழகன் - நேரக் குறைப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in