ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்ப விஷயங்களை அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன். உலகத் திரையுலகத்தில் புதிதாக அறிமுகமாகும் விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு, அதைத் தனது படங்களில் பயன்படுத்த ஆரம்பிப்பார்.
தற்போது சினிமா தொழில்நுட்பம் 'ஏஐ' கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. அதனால் அது பற்றி தெரிந்து கொள்ள மூன்று மாதப் பயிற்சி வகுப்பு ஒன்றில் சேர்ந்து படிக்க கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அந்தப் படிப்பை முடித்துவிட்டு வந்த பிறகுதான் அவரது அடுத்த படம் பற்றி அவர் முடிவெடுப்பார் என்கிறார்கள். அவரது அடுத்த வெளியீடாக 'தக் லைப்' படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பிறகு 'இந்தியன் 3' வெளியாகலாம். அதற்காக சில நாட்கள் படப்பிடிப்பும் நடைபெறலாம் என்கிறார்கள்.
அதை முடித்த பிறகு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க உள்ள 'கமல்ஹாசன் 237' படம் ஆரம்பமாகுமா என்பது அப்போதுதான் தெரியும். கமல் படங்களைப் பொறுத்தவரையில் என்ன வேண்டுமானாலும் மாற்றங்கள் நடக்கலாம்.