சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
நடிகர் அஜித் சினிமாவை தாண்டி கார், பைக் ரேஸ், போட்டோகிராபி, சிறிய ரக டிரோன் உருவாக்கம், துப்பாக்கி சுடுதல் என பலவற்றிலும் ஆர்வம் மிக்கவர். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் விடாமுயற்சி படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் துபாயில் கார் ரேஸ் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அங்குள்ள கார் ரேஸ் கிளப்பில் உயர் ரக கார்களில் அவர் சீறி பாயும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அவர் 2025ல் மோடோ ஜிபி எனப்படும் கார் ரேஸில் களமிறங்க உள்ளார்.
இதுபற்றிய தகவலை கார் ரேஸ் வீரரான நரேன் கார்த்திகேயன் பிரேக்கிங் நியூஸ் என குறிப்பிட்டு வெளியிட்ட பதிவில், ‛‛2025ம் ஆண்டுக்கான மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஜிடி ரேஸிங் பிரிவில் எனது நண்பர் அஜித் களமிறங்க கடுமையாக உழைத்து வருகிறார். நிஜமாகவே அவர் ஒரு ஜாம்பவான் தான். அற்புதமான நடிகர் மற்றும் கார் ரேஸர். அவருக்கு அதிகமான கார் பந்தய அனுபவங்கள் இல்லை. இருந்தாலும் 2010ல் FIA F2ல் அவர் பங்கேற்று கார் ஓட்டியது எனக்கு நினைவில் உள்ளது. அவரின் திறமைகளுக்கு எல்லை இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு அற்புதமான மனிதர். குட் லக் தல. உங்களுக்கு நான் வழிகாட்டியாக இருந்து உங்களை மீண்டும் பந்தயத்தில் ஈடுபடுத்த முடிந்தால் அது ஒரு பாக்கியமாக இருக்கும்'' என பதிவிட்டுள்ளார்.