விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! |
சின்னத்திரையில் சூப்பர் ஹிட் அடித்து ஆல் டைம் பேவரைட்டாக மக்கள் மனதில் இடம்பிடித்த தொடர் கோலங்கள். இந்த தொடர் வெளியாகி 15 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அண்மையில் யு-டியூபில் வெளியாகியும் நல்ல ரீச்சை பெற்று வருகிறது. இதற்கிடையில் சோஷியல் மீடியாவின் வளர்ச்சியால் இந்த தொடரில் இடம் பெற்ற தோழர் மற்றும் தில்லா கதாபாத்திரங்களுக்கு தற்போது சிறப்பு கவனம் பெற்று வருகிறது.
இதில் நடித்த நடிகர்களை பல ஊடகங்கள் பேட்டி எடுத்து வரும் நிலையில் தில்லா கதாபாத்திரத்தில் நடித்த சுப்பிரமணி தற்போது தான் குடும்ப வாழ்க்கையில் நுழைய போவதாக கூறினார். கிட்டத்தட்ட 50 வயதை நெருங்கிவிட்ட தில்லா சுப்பிரமணி சமூக சேவையில் கவனம் இருந்ததால் 24 வயதில் கல்யாணம் வேண்டாம் என்று முடிவெடுத்ததாகவும், இப்போது பலரும் இந்த வயதில் கல்யாணமா? என்று கேட்டாலும் அதையெல்லாம் தான் கண்டுகொள்ள போவதில்லை என்றும் கூறியுள்ளார்.