பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
கடந்த 2012ம் ஆண்டில் சுந்தர்.சி இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோர் இணைந்து நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'கலகலப்பு'. இந்த பாகத்தின் வெற்றிக்குப் பிறகு கடந்த 2018ல் சுந்தர். சி ஜீவா, ஜெய் நடிப்பில் 'கலகலப்பு 2'ம் பாகத்தை இயக்கினார். இப்படத்திற்கு விமர்சனம் முன்ன பின்ன இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
சமீபத்தில் சுந்தர்.சி கலகலப்பு 3ம் பாகத்தை இயக்க தயாராக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் சுந்தர். சி தற்போது வடிவேலுவுடன் 'கேங்கர்ஸ்' படத்தினை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை இயக்கவுள்ளார் சுந்தர் சி. இந்த படங்களை முடித்த பிறகு தான் சுந்தர் சி கலகலப்பு 3ம் பாகத்திற்கான பணிகளை தொடங்கவுள்ளார் .இந்த படத்தில் மீண்டும் விமல் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் விமல் உறுதி செய்தார்.