பிப்-20ல் வெளியாகும் பிரியாமணி மலையாள படம் | எனக்கு அரெஸ்ட் வாரண்டா ? பொய் பரப்புவோர் மீது சோனு சூட் காட்டம் | ஆஸ்தான நடிகரையும் மோகன்லால் படத்தில் இணைத்துக் கொண்ட ஆவேசம் இயக்குனர் | வேட்டையன் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தேன் ; மலையாள நடிகர் அலான்சியர் லே | பிரதமர் மோடிக்கு நடன பொம்மைகளை பரிசளித்த நாகசைதன்யா - சோபிதா தம்பதி | தமிழில் வெப் தொடர் அறிமுகமாகிறார் ஜான்வி கபூர்! | போர் தொழில் இயக்குனரின் கதையில் அசோக் செல்வன்! | டாக்சிக் படத்தின் புதிய அப்டேட்! | பாலகிருஷ்ணாவிற்கு வில்லனாக ஆதி! | சிம்புவிற்கு ஜோடியாகும் சாய் பல்லவி! |
பின்னணி பாடகி சுசித்ரா அவ்வப்போது சோசியல் மீடியாவில் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் குறித்த சர்ச்சை வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதிலும் மறைந்த இயக்குனர் பாலசந்தர் குறித்து அவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதையடுத்து பலரும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்தார்கள். அதையடுத்து மணிமேகலை - பிரியங்கா விவகாரத்திலும் சர்ச்சை வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் சுசித்ரா. அதேபோல் இதற்கு முன்பு மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் போதை விருந்து நடத்தியதாகவும், அதில் இளம் பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை உடனடியாக மறுத்திருந்தார் ரீமா கல்லிங்கல். இந்நிலையில் தற்போது அவர் தன்னைப் பற்றி ஆதாரம் இல்லாத பொய்யான செய்திகளை பாடகி சுசித்ரா வெளியிட்டதாக சொல்லி அவர் மீது கொச்சின் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். ஆன்லைன் மூலம் அவர் அளித்த இந்த புகார் மீதான நடவடிக்கையை எடுக்குமாறு எர்ணாகுளம் காவல் உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பாடகி சுசித்ராவை கைது செய்து இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது.