சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி வரும் திரைப்படம் ' தக் லைப்'. இதில் சிலம்பரசன், அசோக் செல்வன், த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ், ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார்.
இதன் படப்பிடிப்பு சென்னை, ராஜஸ்தான், டில்லி, புதுச்சேரி, கோவா போன்ற பகுதிகளில் 120 நாட்களுக்கு மேல் நடத்தினர். இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்தது. இப்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழுவினர் இரவு பார்டி உடன் கொண்டாடியுள்ளனர். இதில் கமல், சிம்பு, மணிரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை சுமார் ரூ. 149.70 கோடிக்கு பிசினஸ் ஆகியுள்ளதாம். இதுவரை கமல் படங்களை விட அதிக தொகைக்கு இந்த படம் விற்கப்பட்டதாக சொல்கிறார்கள்.