வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? | வா வாத்தியாருக்கு யு/ஏ சான்றிதழ்: ஆனாலும் பதைபதைப்பில் படக்குழு | இன்று ‛சேது' படத்துக்கு வயது 26 | தெலுங்கில் 'வா வாத்தியார்' படத்திற்கு வந்த சோதனை |

விடாமுயற்சி படத்துடன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' என்கிற படத்திலும் நடித்து வருகிறார் அஜித். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார்.
ஏற்கனவே இதன் இரண்டு கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிவடைந்தது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் துவங்குகிறது. அங்கு 70 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் பெரும்பாலும் சண்டை காட்சிகள் மற்றும் சில பாடல் காட்சியினை படமாக்கவுள்ளனர் என்கிறார்கள். விரைவில் அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் ஸ்பெயின் பறக்க உள்ளனர்.