ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி |
தமிழிலிருந்து தெலுங்கிற்கும், தெலுங்கிலிருந்து தமிழிற்கும் படங்கள் டப்பிங் ஆகி வருவது வழக்கம்தான். சமீபகால வருடங்களில் தமிழிலிருந்து தெலுங்கில் அதிக வசூலைக் கொடுத்த படங்கள் என்று முன்னணி நடிகர்களின் படங்களைச் சொல்ல முடியவில்லை. விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த 'பிச்சைக்காரன்' படம் அங்கு டப்பிங் ஆகி 50 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதற்குப் பிறகு அப்படியான ஒரு வசூலை வேறு யாரும் பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
விஜய் நடித்து வரும் வாரம் வெளியாக உள்ள 'தி கோட்' படத்தைத் தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். தெலுங்கில் டிரைலரைக் கூட வெளியிட்டார்கள். சுமார் 4 மில்லியன் பார்வைகளை அந்த டிரைலர் தொட உள்ளது. இந்நிலையில் படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் தெலுங்கில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பும், வரவேற்பும் மிகவும் குறைவாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு படத்தின் படத்தை வெளியிடுவது 'புஷ்பா, குட் பேட் அக்லி' உள்ளிட்ட படங்களின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் மைத்ரி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் என்ற பெயரில் படத்தை தெலுங்கில் வினியோகம் செய்கிறார்கள்.
தமிழிலிலேயே இதுவரை படத்திற்கு எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் மொத்த படக்குழுவினருடன் நடத்தவில்லை. வெங்கட் பிரபு மட்டும் படத்தின் டிரைலர் வெளியான போது பத்திரிகையாளர்களை சந்தித்தார். இரண்டு தினங்களுக்கு முன்பு நடப்பதாக இருந்த ஒரு சந்திப்பும் ரத்து செய்யப்பட்டது. படத் தயாரிப்பு நிறுவனம் எதற்காக இப்படி நடந்து கொள்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது என விஜய் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.