சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
மலையாள திரை உலகில் நடந்துள்ள பாலியல் தொல்லைகள் குறித்து ஹேமா கமிட்டி அளித்த அறிக்கையை தொடர்ந்து மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் மீது பரபரப்பான பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருகிறது. பிரபல மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்ரா தேசிய விருது பெற்ற மலையாள நடிகரும், இயக்குனரும், கேரள திரைப்பட அகாடமியின் தலைவருமான ரஞ்சித் மீது பாலியல் புகார் தெரிவித்தார். “2009ம் ஆண்டு 'பாலேரி மாணிக்கம்' என்ற படத்தில் நடித்தபோது ரஞ்சித் தனி அறைக்குள் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்'' என்றார்.
இதே போல மலையாள நடிகர் சங்க பொதுச்செயலாளரான நடிகர் சித்திக் மீது ரேவதி சம்பத் என்ற நடிகை பாலியல் புகார் தெரிவித்தார். 'சித்திக் என்னை ஓட்டல் அறைக்கு அழைத்து ஒருமணி நேரம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்” என்றார்.
இந்த புகார்களை தொடர்ந்து ரஞ்சித் கேரள திரைப்பட அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மலையாள நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவியை சித்திக் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சங்கத்தின் தலைவர் மோகன்லாலுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அது இன்னும் ஏற்கப்படவில்லை.