குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |
நடிகர் வடிவேலு பீக்கில் இருந்த சமயத்தில் அவரது படங்களில் தொடர்ந்து குறிப்பிட்ட சில நகைச்சுவை நடிகர்கள் இடம் பிடித்து வந்தனர். அவர்களில் நடிகர் சிங்கமுத்துவும் ஒருவர். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன. ஆனால் அரசியல் நிலைப்பாடு காரணமாக சிங்கமுத்துவுக்கும் வடிவேலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல பேட்டிகளில் பொது மேடைகளில் சிங்கமுத்து வடிவேலு குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்து பேசி உள்ளார். சமீபத்திய அவரது பேட்டிகளிலும் கூட வடிவேலுவின் திரை வாழ்க்கை மற்றும் அவரது சொந்த வாழ்க்கை குறித்து விமர்சித்து பேசியிருந்தார் சிங்கமுத்து.
இதனைத் தொடர்ந்து வடிவேலு தரப்பிலிருந்து இப்படி சிங்கமுத்து தன்னை பற்றி அவதூறான கருத்துக்களை பொதுவெளியில் பேசி தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் விதமாகவும் பேசுவதற்கு தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மான நஷ்ட ஈடாக தனக்கு சிங்கமுத்து 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பதில் அளிக்க நடிகர் சிங்கமுத்துவுக்கு உயர் நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.