சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, மிளகா, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி தற்போது இயக்கி வரும் படம் 'திரு.மாணிக்கம்'. சமுத்திரகனி, பாரதிராஜா, தம்பிராமையா, நாசர், கருணாகரன், ஶ்ரீமன், இளவரசு, சாம்ஸ், சந்துரு, அனன்யா, ரேஷ்மா, வடிவுக்கரசி நடிக்கிறார்கள். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.பி. ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபால கிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
படம் பற்றி நந்தா பெரியசாமி கூறும்போது, “ஒரு மனிதனால் நேர்மையாக வாழ முடியாது, இந்த சமூகம் வாழ விடாது என்பார்கள். அது தவறான கருத்து, எந்த நிலையிலும் ஒரு மனிதனால் நேர்மையா இருக்க முடியும் என்பதை சொல்லும் படம். அப்படிப்பட்ட திரு.மாணிக்கமாக சமுத்திரகனி வாழ்ந்திருக்கிறார்.
இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகரின் இசை பெரிய பலம். நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களை வைத்து பிரமாண்டமாக ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரத்தில் உயிரோட்டமான பின்னணி இசையை இரவு பகல் பாராது உருவாக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பேசப்படுவதாக இருக்கும்” என்றார்.