எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் வீட்டிற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு சென்றார் நடிகரும், தவெக தலைவருமான விஜய். 'தி கோட்' படத்தில் விஜயகாந்த்தை 'ஏஐ' தொழில்நுட்பத்தில் பயன்படுத்திக் கொள்ள விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சம்மதித்தற்கு நன்றி சொல்லவே இந்த சந்திப்பு என்று சொல்கிறார்கள்.
விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் விஜய், யுவராணி நடித்து வெளிவந்த 'செந்தூரபாண்டி' படத்தில் விஜயகாந்த் முக்கிய வேடத்தில் நடித்துக் கொடுத்தார். அதற்குப் பிறகே விஜய், தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கும் சென்று சேர்ந்தார்.
விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த போது கூட விஜய் மீது செருப்பு வீசப்பட்டது சர்ச்சையானது. இந்நிலையில் விஜயகாந்த் வீட்டிற்கு தற்போது விஜய் சென்றது குறித்து மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது. விஜயகாந்த் மறைவுக்கு விஜய் அஞ்சலி செலுத்த வந்தது குறித்து விஜயகாந்த்தின் மகன் விஜய் பிரபாகரன் பேசிய கொஞ்சம் பழைய வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
அதில், விஜய பிரபாகரன், “அப்பா இறந்த அன்னைக்குதான் நான் பர்ஸ்ட் டைம் நேர்ல விஜய் அண்ணனைப் பார்க்கிறேன். இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லை. அன்னைக்குதான் பர்ஸ்ட் டைம் அவர் என் கிட்டயே பேசறாரு. அந்த ஒரு வார்த்தை, தோள்ல கை வச்சிட்டு 'டேக் கேர் பிரதர்'னு சொன்னாரு. நான் அவருக்கு குளோஸ்லாம் இல்லை. அப்பாவோட லைப்ல எஸ்ஏ சந்திரசேகர் சார் குளோஸ். அப்பாவோட படங்கள்ல அப்பாவோ சின்ன வயசு கதாபாத்திரத்துல விஜய் அண்ணன் நடிப்பாரு. 'செந்தூரபாண்டி' லைப், எல்லாருக்கும் தெரியும். எங்களுக்கும் அவருக்கும் பெரிய கனெக்ஷன்லாம் இருந்ததில்ல,” என்று அவர் பேசிய வீடியோவைப் பலரும் பகிர்ந்துள்ளனர்.
இத்தனை வருடங்களாக விஜயகாந்த்தை சென்று பார்க்காத விஜய், அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதும் கூட போகாத விஜய், 'தி கோட்' படத்திற்காகவும், அவருடைய அரசியல் எதிர்காலத்திற்காகவும் சென்று பார்த்தாரா என்று சமூக வலைத்தளங்களில் பலர் கேள்விகளை எழுப்புகின்றனர்.