நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் | கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் |
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, வரும் 22ம் தேதி சென்னை, பனையூரில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில் இன்று மஞ்சள் நிறத்தில் விஜய் உருவம் பொறித்த கொடி ஒன்று கொடி கம்பத்தில் ஏற்றி ஒத்திகை பார்க்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற தன் ரசிகர் மன்றத்தை, கடந்த பிப்ரவரி 2ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக விஜய் மாற்றினார். லோக்சபா தேர்தலுக்கு முன்பே கட்சி துவங்கினாலும், 2026 சட்டசபை தேர்தலே இலக்கு என அறிவித்தார். தனி கட்சி துவங்கி விட்டதால், இருக்கும் படங்களை முடித்து, முழுநேரமாக அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்த விஜய், கட்சியை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, வரும் செப்., 22-ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடக்கவுள்ளது. மாநாட்டின்போது கட்சி கொடி அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே கட்சிக் கொடியை வரும் 22ம் தேதி, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திலேயே புதிய கொடியை விஜய் அறிமுகம் செய்யவிருப்பதாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி கொடிக் கம்பம் நடப்பட்டு இதற்கான பணிகள் பனையூர் கட்சி அலுவலகத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இன்று(ஆக., 19) கட்சி அலுவலகத்திற்கு வந்த விஜய் ஒத்திகை நிகழ்ச்சியாக கட்சி கொடி ஒன்றை ஏற்றினார். அதில் மஞ்சள் நிறத்தில் மத்தியில் விஜய் உருவம் பதித்த கொடி இடம் பெற்று இருந்தது. இதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியா என தெரியவில்லை. ஒத்திகைக்காக இப்படி ஒரு கொடியை ஏற்றி உள்ளதாக சொல்கிறார்கள். அதிகாரப்பூர்வ கட்சி கொடி வரும் 22ம் தேதி தான் வெளியாகிறதாம். இதனிடையே இன்றைய ஒத்திகையின் போது விஜய் கட்சிக்கான கொள்கை பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளதாம். இதனை பாடலாசிரியர் விஜய் எழுதி உள்ளார்.