ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? |
இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் ஏரியாவில் அஜ்மத் பேகம் என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்ததாக கூறப்படுகிறது. அஜ்மத் பேகத்தின் சகோதரர் முகமது ஜாவித் என்பவர் யுவன் சங்கர் ராஜா மீது போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், யுவன் சங்கர் ராஜா ரூ.20 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்தார். வாடகையை எனது சகோதரி கேட்கும்போதெல்லாம் யுவன் சங்கர் ராஜா தராமல் அலட்சியம் காட்டி மறுத்து பேசி வந்துள்ளார். தற்போது அவர் எந்த தகவலும் சொல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து கொண்டு காலி செய்வதாக பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறி உள்ளார். மேலும் நேற்றும், இன்றும் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்து சென்றுள்ளார். யுவனிடம் வாடகை பாக்கி மற்றும் சேதத்துக்கான இழப்பீட்டை பெற்று தர வேண்டும்' எனத் தெரிவித்து இருந்தார்.
இதை மறுத்த யுவன், தனது பெயருக்கு களங்கம் கற்பிக்க வீட்டு உரிமையாளர் முயற்சிப்பதாக கூறி, ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் இசை சட்ட ரீதியாக எதிர்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக யுவனிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் முடிவெடுத்துள்ளனர். விரைவில் அவர் போலீசில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என தெரிகிறது.