பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவில் இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கின்றார். இப்படத்தை கன்னெக்ட் மீடியா மற்றும் மெர்குரி என இரு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்திற்கு 'இளையராஜா' என தலைப்பு வைத்துள்ளனர். படத்திற்கான திரைக்கதை நடிகர் கமல்ஹாசன் எழுதுகிறார்.
தற்போது, நடிகர் தனுஷ் சேகர் கமூலா இயக்கும் குபேரன் படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து, ஆனந்த் எல்.ராய் இயக்கும் பாலிவுட் படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இது முடிந்தபின், இளையராஜாவின் பயோபிக் கதையில் நடிப்பார் எனத் தெரிகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் ஆக நீரவ் ஷா மற்றும் கலை இயக்குநராக முத்துராஜ் இணைந்ததாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் செட் அமைக்கும் பணிக்கான முன்னோட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முத்துராஜ் உடன் இளையராஜா, அருண் மாதேஸ்வரன் உள்ள போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அக்டோபர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.