‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
நடிகர் வடிவேலு நடித்த, 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' வாயிலாக, 'கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க...' என்று, பல ஆண்டுகளுக்கு முன் அழைத்தவர் சிம்புதேவன்.
திரைப்படத்தை பார்த்தவர்கள் எல்லாம், சிரித்து உருண்டனர். இதற்கு பிறகு, அறை எண் 305ல் கடவுள், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், புலி என, வேறு பாதையில் பயணிக்க துவங்கினார்.
இவரது சமீபத்திய 'போட்' பயணம், மகிழ்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அந்த மகிழ்ச்சியோடு, கோவையில் ஒரு கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், இவரும், படத்தில் நடித்த சிலரும் பங்கேற்றனர்.
''கடலில் படம் பிடிப்பது, ஒரு சவாலான காரியம் தான். பத்து பேர் பயணிக்கக் கூடிய சிறிய படகில் கதை நடக்கிறது. படக்குழுவினர் மற்றொரு படகில் இணையாக நிறுத்தப்பட்டனர். கேமராவை எப்படி அமைத்தாலும், அது அசைந்து கொண்டே இருக்கும். அதற்கு மேல், எங்கள் யாருக்கும் நீச்சல் தெரியாது. இதையெல்லாம் தாண்டி, மறக்க முடியாத அனுபவமாக படம் அமைந்திருக்கிறது,'' என்று பேசினார் சிம்புதேவன்.
நடிகை கவுரி கிஷன் பேசுகையில், '' நான் நடித்த '96' படத்துக்கு பின், நிறைய வித்தியாசமான படங்கள் அமைகின்றன. இப்படம், அனைவருக்கும் பிடிக்கும்,'' என்றார்.