காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் தி கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் நேற்று ஸ்பார்க் என்ற மூன்றாவது பாடல் வெளியிடப்பட்டது. அந்தப் பாடலில் விஜய்யை இளமையாக காண்பிக்கும் டி ஏஜிங் என்ற புதிய டெக்னாலஜி இடம் பெற்றுள்ளது. ஆனால் ந்த லுக் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக டி ஏஜிங் பண்ண சொன்னா, டோலி சாய் வாலாவை வச்சி டூப் போட்டு இருக்காங்க என்றும் அந்த யங் கெட்டப்பை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.