ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
விஜய்சேதுபதியின் 50வது படமாக சமீபத்தில் 'மஹாராஜா' வெளியானது. 'குரங்கு பொம்மை' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதன் இயக்கி இருந்தார். அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா , வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியதாக தயாரிப்பு நிறுவனமே அறிவித்தது. தற்போது ஓடிடியிலும் படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் நித்திலன் சாமிநாதனை ரஜினிகாந்த் தனது இல்லத்திற்கு அழைத்து பாராட்டி மகிழ்ந்துள்ளார். இது குறித்து நித்திலன் சாமிநாதன் தனது சமூக வலைதள பக்கத்தில் "அன்புள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார். உங்களை சந்திக்கும் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. கோலிவுட்டின் தங்க கரங்களிலிருந்து வாழ்க்கை , அனுபவம் பற்றிய நாவலை படிப்பது போன்று இருந்தது. உங்களின் விருந்தோம்பல் மற்றும் பணிவு கண்டு நான் வியப்படைகிறேன். மஹாராஜா படத்தை நீங்கள் எந்த அளவிற்கு நேசித்துள்ளீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். மீண்டும் ஒருமுறை நன்றி. வாழ்க தலைவர்" என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.