பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
ஹிந்தித் திரையுலகத்தில் சில வருடங்களுக்கு முன்பு வரை வசூல் நாயகனாக இருந்தவர் அக்ஷய் குமார். ஆனால், அவர் நடித்து கடைசியாக வெளிவந்த சில படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன. கடைசியாக வெளிவந்த 'சர்பிரா' படமும் படுதோல்வியை சந்தித்தது.
அக்ஷய் நடித்து ஆகஸ்ட் 15ல் “கேல் கேல் மெய்ன்' என்ற ஹிந்திப் படம் படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் தனது தோல்விகள் குறித்து வெளிப்படையாகப் பேசினார் அக்ஷய்.
“எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று சொல்ல விரும்புகிறேன். நான் எதைப் பற்றியும் அதிகம் நினைப்பதில்லை. எனது நான்கைந்து படங்கள் சரியாக வெற்றி பெறவில்லை. அதனால், 'சாரி, பிரண்ட், கவலைப்பட வேண்டாம்,' என பல மெசேஜ்கள் எனக்கு வருகின்றன. நான் சாகவில்லை, இப்படி வரும் மெசேஜ்களைப் பார்த்தால் எனக்கு இரங்கல் அனுப்புவது போல உள்ளது.
ஒரு பத்திரிகையாளர், “கவலைப்பட வேண்டாம், நீங்கள் திரும்பி வருவீர்கள்' என மெசேஜ் அனுப்பினார். அவரை நான் தொடர்பு கொண்டு, “திரும்பி' என்றால் என்ன, நான் எங்கே போய்விட்டேன், நான் இங்குதான் உள்ளேன், தொடர்ந்து வேலை செய்வேன் என்று சொன்னேன்.
நான் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பேன். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமில்லை. நான் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து, வேலைக்குச் சென்று, வீட்டிற்கு வருகிறேன். நான் என்ன சம்பாதித்தாலும் சொந்தமாக சம்பாதிக்கிறேன். நான் யாரிடமிருந்தும் எதையும் எடுத்துக் கொள்ள மாட்டேன். என்னைத் தடுக்க என்னை சுட்டு வீழ்த்தும் வரும் நான் தொடர்ந்து வேலை செய்வேன்,” என காட்டமாகப் பேசியுள்ளார்.